டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் அவர்களின் THE SALT 5IGHT என்பதன் தமிழ் மொழியாக்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவும் (Hyper Tension) ந்தப் பிரச்சினையின் தொடர்பான நோய்கள் காரணமாகவும் 9.8 மில்லியன் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்அதிக ரத்த அழுத்தம், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்சிறு நீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற உடல்ரீதியான நோய்கள் ஆகியவை நோயாளிகள்  உணர்ந்து கொள்ளும்  முன்பாகவே மரணத்தை விளைவிக்கின்றதுஉலக மக்கள் தொகையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35% பேர்கள் அதிக ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்அதிக ரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்கும் வழிகளில் ஒன்றாகவும் உடல்ரீதியான தாக்கத்தைத் தவிர்க்கவும் நாம் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பது என்பது சிறந்த முறையாகும்.   வளர்ந்த நாடுகளான ஃபின்லேண்ட், இங்கிலாந்துஆஸ்திரேலியா, கேனடா முதலிய நாடுகளில் அவர்கள்  உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பதற்காக மக்களிடையே பல வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றனஇந்த நாடுகளிலெல்லாம் அரசு சாரா நிறுவனங்கள் (NGO”S) அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுகின்றனஉண்ணும் உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் உடல் நலம் அதிசயிக்கத்தக்க விதத்தில் முன்னேற்றம் காணலாம் என்ற உண்மையை முதலில் நிரூபணம் செய்தது ஃபின்லேண்ட் என்ற நாடுதான்  என்பது குறிப்பிடத்தக்கதுஅந்த நாட்டில் மக்களுடைய ஆரோக்யம் நல்லவிதத்தில் முன்னேற்றமடைந்திருக்கிறது என்ற உண்மை ஒரு புறமிருக்க இதய  நோய் தொடர்பாகவும் (heart revascularization) சிறுநீரக சுத்திகரிப்புக்காகவும் (dialysis) செலவழிக்கவேண்டியிருந்த தொகையில் பெருமளவில் குறைக்கப்பட்டு அந்தத் தொகை சேமிக்கப்பட்டிருக்கிறது

 இந்தியர்கள் உண்ணும் உணவில் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 கிராம் அளவுக்கு உப்பை சேர்த்துக்  கொள்கிறோம்பதப்படுத்தப்பட்ட உணவில் சோடியம் எவ்வளவு அளவுக்கு சேர்க்கப்படுகிறது என்பதற்கான போதிய தகவல்கள் நம் இந்தியாவில் இன்னும் திரட்டப்படவில்லைநாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் மொத்தமாக ஐந்து கிராமுக்கும் குறைவாக இருந்தாலே போதுமானது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று  தெரிவிக்கிறதுஇயற்கையாய்க் கிடைக்கும் உணவுகளிலேயே உப்பும் சோடியமும் கலந்துள்ளதுதவிர சமையலின்போதும், உணவுகளைப் பதப்படுத்தும்போதும் மேலும் அதிக அளவில்  சேர்க்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் நமது நாட்டில்  ஏற்படும் வேகமான வளர்ச்சியினாலும், நகரமயமாக்கலின் விளைவாகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தேவையும், எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டனஆக இந்த சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள் உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது என்ற நடவடிக்கையை  உடனடியாக மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

 பல ஆயிரம் வருடங்களாகவே உப்பையும், சோடியத்தையும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி உணவைப் பதப்படுத்தி வருகிறோம்இப்படி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கிறது. தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்களின் வடிவமும், கெட்டித்தன்மையும் பாதுகாக்கப்படுகின்றது.

சுவை: அதிகமாக நாம் உணவில் உப்பை சேர்த்துக் கொள்ள சேர்த்துக்கொள்ள நாவில் உள்ள சுவையை உணரும் மொட்டுக்கள் மேலும் அதிக சுவையை விரும்ப ஆரம்பிக்கின்றன. நீங்கள் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக உங்களின் உணவில் உப்பைக் குறைத்தீர்களேயானால் அந்த உப்புக்குறைந்த  உணவை விரும்ப ஆரம்பிப்பீர்கள்கூடவே மற்ற சுவைகளையும் உணர, விரும்ப ஆரம்பிப்பீர்கள்.

பதப்படுத்துதல்: குளிர்பதனப் பெட்டியில் உணவுப் பொருள்களை பாதுகாத்தல், காற்றுப் புகாவண்ணம் உணவைப் பேக்கிங்க் செய்தல் போன்ற முறைகளினால் சோடியம் பயன்படுத்திப் பதப்படுத்துதல் என்ற் முறையினைத் தவிர்க்கலாம்.

வடிவம் மற்றும் முறுமுறுப்புத்தன்மை பாஸ்பேட், பைகார்பனேட், நைட்ரேட், சல்ஃபைட், முதலியவற்றைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை பேக்கிங் செய்கையில் அதன் மணம், முறுமுறுப்பு, உறுதித்தன்மை ஆகிய அம்சங்கள் உறுதி செய்யப்படுகின்றன. பிரட் அதாவது ரொட்டி, மற்றும் உடனடி நூடுல்ஸ் போன்றவைகள் தயாரிக்கப்படும்போது இந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பொருள்கள் நிறையவே கலக்கப்படுகின்றன 

நம் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதற்கான டிப்ஸ்:

உணவில் உப்பைக் குறையுங்கள். பாதிப்புக்குள்ளான உங்கள் நாவில் உள்ள சுவை மொட்டுக்களை மீட்டெடுங்கள்.

முடியும்போதெல்லாம் அவ்வப்போது தயாரிக்கப்பட்ட, சமைக்கப்பட்ட  உணவை உண்ணுங்கள்.

சமைக்கும்போது மிகக் குறைந்த உப்பைப் பயன்படுத்துகங்கள்.

உணவு மேஜையில் தனியாக ஒரு உப்பு பாட்டிலை கூடவே  வைக்காதீர்கள். (இந்தியாவில் சூப் குடிக்கும்போது ஏற்கனவே இருக்கும் உப்புக்கும் மேல் அதிக உப்பை சேர்த்துக் கொள்ள ஒரு உப்பு பாட்டில் வைக்கப்படுகிறது)

உணவில் மணம் சேர்க்க மூலிகைகள், மசாலாக்கள் முதலியவைகளைத் தேவையானபோது பயன்படுத்தலாம்

உங்கள் சிறுநீரகம்  சரியாக செயல்படுகின்றது என்று உறுதிசெய்யப்பட்டால் உப்புக்குப் பதிலாக மாற்று உப்பை (பொட்டாசியம் கலக்கப்பட்டது) சேர்த்துக் கொள்ளலாம்.  

 மக்களிடையே உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைப்பதற்கான வழிமுறைகள்: 

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் போதுமானது என்ற உண்மையை மக்களுக்குக் குறிப்பாக இளைய தலைமுறைக்குத் தெரிவித்தல்.

பொருள்களின் மீது ஒட்டப்படும்  லேபில்களில் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறிக்க சட்டம் கொண்டு வருதல்.

இங்கு இருக்கும் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் அதிகப்படியாக வியர்த்துக் கொட்டுதல் ஆகியவற்றின் காரணமாக அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற் கருத்து நிலவுகிறது. அறிவியல் ரீதியாக இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

24 மணி நேரம் ஒருவரது சிறுநீர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு ஒருவர் உட்கொள்ளும் உப்பின் அளவு கணிக்கப்படுகிறது.   ஒரு லிட்டர் சிறுநீரில் 300 மில்லி கிராம்  சோடியம்தான் அதாவது மிகக் குறைந்த அளவிலான உப்புதான் இழப்பாகிறது

குழந்தைகளுக்கு அதிக உப்பு தேவை என்று ஒரு கருத்து நம்மிடையே உள்ளது. அதற்கும் எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி பெரியவர்களை விட குழந்தைகளுக்கு குறைந்த அளவு உப்பே தேவைப்படுகிறது 

சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன்: (Sapiens Health Foundation)  

அரசு சாரா அமைப்பான சேப்பியன் ஹெல்த் ஃபவுண்டேஷன் கடந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையும் சேவையும் செய்து வருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் தங்களின் உணவில் உப்பைக் குறைக்கவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முழுமூச்சுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் இந்த முயற்சியில் நமது ஃபவுன்டேஷன் இப்பணியில்  ஈடுபட்டு வருகின்றதுபல இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக அச்சிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்கள் போன்றவைகள் வழியாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தவிர நடைப் பயணங்களும் மேற்கொள்ளப்படுகின்றனதற்போது மற்ற சில  அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்துஉப்புடன் போரிடுவோம்” (SALT 5 IGHT) –என்பதற்கான விழிப்புணர்வு மாநாட்டை நடத்தவிருக்கிறோம்இந்த மாநாட்டின் மையப் பொருளாக மக்கள் எந்த அளவு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்யமாக இருக்கலாம் என்ற மையப்பொருள் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அமைந்திருக்கும்அதிக உப்பை சேர்த்துக் கொள்வதன் காரணமாக எப்படி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, உப்பின் அளவைக் குறைக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் போன்ற வழிமுறைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கின்றன.   அரசாங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்படுகிறது. .  ஒவ்வொரு உணவுப் பொருளின் மேலும் அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பு மற்றும் சோடியத்தின் அளவைத் தெரியப்படுத்தும் விதத்தில் லேபில்கள் இருக்கவேண்டும் என்பதை  சட்டமாக்குதல் போன்ற விஷயங்களும்  கலந்தாலோசிக்கப்பட விருக்கின்றனஉணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களிலிருந்தும் பிரதி நிதிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் கையாளும் உணவுகளில் உப்பு மற்றும் சோடியம் அளவினைக் குறைக்க வழிகாணவிருக்கிறோம்சென்னை தொழில் நுட்பக் கழகம் (MADRAS IIT) இந்த மாநாட்டில் சம பங்கு (Partner) வகிக்கிறது.  2017 நவம்பர் 11ம் தேதியன்று தொழில் நுட்பக் கழக வளாகத்தில் இம்மாநாடு நடக்கவிருக்கிறது. இங்கிலாந்தில் இயங்கும் உப்பு மற்றும் அதிக ரத்த அழுத்தம் தொடர்பான செயல்பாடுகளை முன்னின்று மேற்கொள்ளும் (WASH– WORLD ACTION ON SALT AND HYPERTENSION) அமைப்பைச் சேர்ந்த   பேராசிரியர் கிரகாம் மெக்கிரகர்  (PROF. GRAHAM MACGREGOR) இந்த மாநாட்டில் தலைமைப் பேச்சாளராக உரையாற்றவிருக்கிறார். உலக நாடுகளில் முக்கியமாக இங்கிலாந்தில் மக்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்ப்பைக் குறைக்க எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பேசவிருக்கிறார். உலக சுகாதார நிறுவனமும் இந்த மாநாட்டில் பங்கு கொள்ள ஒப்புதல் அளித்திருக்கிறது.

The Hindu – Business Line – 13th October 2017

Times of India – 22nd October 2017

For More Press Release on the Salt Fight Conference – Click here

The Salt Fight Conference  
Awareness on Salt Intake – November 11 2017, IIT Madras Campus
Video recordings of the speakers who participated in the conference

 

  1.  Dr. Rajan Ravichandran, Chairman, Sapiens Health Foundation 
  2.  Professor. Bhaskar Ramamurthy, Director, IIT Madras
  3.  Professor. Graham MacGregor, World Action on Salt and Health, UK
  4.  Dr. Sowmya Swaminatha, Deputy Director General of Programmes, WHO
  5.  Ms. Anita Makhijani, Scientist, FSSAI, INDIA
  6.  Dr. Somasundaram, Joint Director, Public Health and Preventive Medicine, Tamil Nadu.
  7.  Professor. V.R. Muraleedharan, IIT Madras, Dept. of Humanities and Social Sciences.

Click here to go to Home Page